Breaking News

"இதுதான் ஸ்டாலின் சார் வரி!" – 30% கமிஷன் புகாரை முன்வைத்து முதல்வர் ஸ்டாலினைச் சாடிய விஜய்!

 

🔥Also Read👆 🎆விவாகரத்து : சொந்தப் பிரச்சினை குறித்து முதல் முறையாக மனம் திறந்த விஜய்!


மாமல்லபுரம் | மார்ச் 07, 2026

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பங்கேற்றுப் பேசுகையில், தமிழக அரசின் நிதி மேலாண்மை மற்றும் ஊழல் குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக, தமிழக பட்ஜெட்டில் 30 சதவீதம் "கமிஷன் வரியாக"ச் செல்வதாக அவர் குற்றம் சாட்டினார்.

பட்ஜெட் மற்றும் 30% வரி விமர்சனம்:

தமிழகத்தின் தற்போதைய நிதி நிலைமை குறித்து விஜய் பேசியதாவது:

  • நிதி ஓதுக்கீடு: "தமிழகத்தின் மொத்த பட்ஜெட் 4.39 லட்சம் கோடி ரூபாய். இதில் 30 சதவீதம் 'ஸ்டாலின் சார் வரிக்கே' சென்றுவிடுகிறது. இது என்ன புதிய வரி என்று நீங்கள் கேட்கலாம்."
  • கமிஷன் கணக்கு: "இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியில் 20 சதவீதம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், மீதமுள்ள 10 சதவீதம் அவரது அமைச்சர்களுக்கும் செல்கிறது. மக்களுக்காக ஒதுக்கப்படும் பணத்தில் இவ்வாறு 30 சதவீதம் 'சைடில்' ஒதுக்கப்படுவதே நிதிப் பற்றாக்குறைக்குக் காரணம்."

  • ஊழல் ஒழிப்பு: "அரசாங்கமே ஒரு தனி நபருக்கு வரி கொடுக்கிறது என்றால், அதைவிட ஒரு பெரிய கொள்ளையை நாகரீகமாகச் சொல்ல முடியாது. இந்த 'ஸ்டாலின் சார் வரியை' ஒழித்தாலே, மாநிலத்தின் நிதி நிலைமை சீராகி, மக்களுக்குச் சேர வேண்டிய திட்டங்கள் முழுமையாகச் சென்றடையும்."

மகளிர் உரிமைத் தொகை குறித்த கேள்வி:

சமீபத்தில் பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ. 2000 முதல் ரூ. 5000 வரை வரவு வைக்கப்பட்டதைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், "அரசாங்கத்தில் காசு இல்லை என்று சொல்லிக்கொண்டே, தேர்தல் நெருங்கும் நேரத்தில் திடீரென விடியற்காலையில் அனைவரது வங்கிக் கணக்கிலும் பணம் செலுத்துவது எப்படி? பணம் இருக்கிறது, ஆனால் அது சரியான முறையில் மக்களைச் சென்றடையாமல் இந்த 'வரி'யால் தடுக்கப்படுகிறது," எனச் சாடினார்.

நிர்வாகிகளுக்கு அறிவுரை:

தேர்தல் வாக்குறுதிகள் குறித்து எழும் கேள்விகளுக்குப் பதிலளித்த விஜய், ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தைக் கொடுத்தாலே அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியும் என உறுதி அளித்தார்.

No comments

Thank you for your comments