Breaking News

விவாகரத்து : சொந்தப் பிரச்சினை குறித்து முதல் முறையாக மனம் திறந்த விஜய்!

 


மாமல்லபுரம் | மார்ச் 07, 2026

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் இன்று மிக விமரிசையாக நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்கள் திரளாகப் பங்கேற்றனர்.

மகளிர் தின வாக்குறுதிகள்:

விழாவில் உரையாற்றிய த.வெ.க. தலைவர் விஜய், பெண்கள் முன்னேற்றத்தை மையப்படுத்தி தனது தேர்தல் வாக்குறுதிகளை அடுக்கடுக்காக அறிவித்தார். வழக்கம்போல தனது பாணியில் ஒரு குட்டிக் கதையைக் கூறி தொண்டர்களை உற்சாகப்படுத்திய அவர், உரையின் இறுதியில் யாரும் எதிர்பாராத விதமாகத் தனது தனிப்பட்ட வாழ்க்கை விவகாரங்கள் குறித்துப் பேசினார்.

நிர்வாகிகளுக்கு உருக்கமான வேண்டுகோள்:

சமீபகாலமாக சமூக வலைதளங்களிலும், பொது வெளியிலும் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுப்பப்படும் விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகள் குறித்து விஜய் பேசியதாவது:

"சமீபத்தில் ஓடிக்கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்காக நீங்கள் போராடி, ஹர்ட் (Hurt) ஆவதை நான் பார்க்கிறேன். அதைப் பார்த்து எனக்கு ஹர்ட் ஆகிறது. அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்களும், நானும் மக்களின் பிரச்சினைகளை மட்டும் பார்ப்போம், சரியா? ஹர்ட் ஆகாதீர்கள், வருத்தமெல்லாம் கிடையாது."

தன்னைப் பற்றி வரும் விமர்சனங்களைக் கண்டு தொண்டர்கள் மனவேதனை அடைய வேண்டாம் என்றும், மக்களின் தேவைகளில் மட்டும் கவனம் செலுத்துவோம் என்றும் அவர் ஆற்றிய இந்த உரை இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

முக்கியத்துவம்:

கட்சி தொடங்கிய பிறகு தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகளுக்கு விஜய் பொதுமேடையில் பதிலளிப்பது இதுவே முதல்முறை. இது த.வெ.க. தொண்டர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments

Thank you for your comments