🐘 மாமல்லபுரத்தில் விஜய் சொன்ன 'யானை' குட்டிக்கதை! - விஜய்யின் அரசியல் அதிரடி! 🗣️🐘
🔥Click here 👆🎆விவாகரத்து : சொந்தப் பிரச்சினை குறித்து முதல் முறையாக மனம் திறந்த விஜய்!
மாமல்லபுரம் | மார்ச் 07, 2026
விஜய் சொன்ன குட்டிக்கதை:
"ஒரு பெரிய கோவில் யானை இருந்ததாம். அதை யாராலும் அவ்வளவு எளிதில் ஏமாற்ற முடியாது. ஆனால், ஒரு 'ஜெகஜால கில்லாடி' எப்படியோ அந்த யானைக்குத் தேங்காய்க்குள் சுண்ணாம்பை வைத்து ஏமாற்றி ஊட்டிவிட்டார்.
இதைப் பார்த்த கில்லாடியின் நண்பர், 'இந்த யானையை யாராலும் ஏமாற்ற முடியாதே.. நீ எப்படிச் செய்தாய்?' எனக் கேட்டதற்கு, 'அது தொழில் ரகசியம்' எனச் சிரித்துக் கொண்டே சொன்னாராம் கில்லாடி.
பல வருடங்கள் கழித்து, அந்த நண்பர் மீண்டும் கில்லாடியிடம், 'அந்த யானை உன்னிடம் ஏமாந்தது உனது திறமையா? அல்லது தெரியாமல் ஏமாந்துவிட்டதா?' எனக் கேட்டுள்ளார். தனது திறமையைச் சந்தேகித்ததால் ஆத்திரமடைந்த அந்த ஜெகஜால கில்லாடி, 'இப்போ பார், இரண்டாவது முறையும் அந்த யானையை ஏமாற்றிக் காட்டுகிறேன்' என்று சவால் விட்டாராம்.
இம்முறை பஞ்சு வைத்த போலி வாழைப்பழத்தை எடுத்துக்கொண்டு அந்த யானையிடம் சென்றார் கில்லாடி. யானையும் பழத்தை வாங்குவது போலத் தும்பிக்கையை நீட்டியது. ஆனால், கில்லாடி அருகில் சென்ற அடுத்த நொடி, அவரைத் தனது தும்பிக்கையால் தூக்கி ஒரு சுழற்று சுழற்றி எறிந்தது.
அடிபட்டுத் தவித்த கில்லாடியிடம் அந்த நண்பர் சொன்னாராம், 'யானைக்கு நினைவுத்திறன் அதிகம்' என்று!"
கதையின் அரசியல் உட்பொருள்:
குட்டிக்கதையை முடித்த விஜய், அதன் பின்னணியில் உள்ள அரசியலை இவ்வாறு விளக்கினார்:
"இந்தக் கதையில் வரும் யானைதான் நமது வாக்காளர்கள். அந்த ஜெகஜால கில்லாடி யார் என்று கேட்டால் உங்கள் நினைவுக்கு யாராவது வந்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல ராஜா!
அது யாராகவும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், இங்கு இருப்பது ஒற்றை யானை அல்ல. இரட்டை யானைகள், இரட்டைப் போர் யானைகள்! அவர்கள் என் சிங்கப் பெண்கள். உங்களை யாரும் எதையும் சொல்லி ஏமாற்ற முடியாது."
தேர்தல் நேரத்தில் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றுபவர்களுக்கு, மக்கள் தகுந்த நேரத்தில் பதிலடி கொடுப்பார்கள் என்பதையே இந்தக் கதையின் மூலம் விஜய் சூசகமாக உணர்த்தியுள்ளார்.

No comments
Thank you for your comments