Breaking News

இந்தியப் பாதுகாப்பில் புதிய மைல்கல்: ரூ.5,083 கோடியில் ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏவுகணைகள் கொள்முதல்!


The Ministry of Defence signed contracts for the acquisition of six Advanced Light Helicopters (ALH) Mk-III (Maritime Role) for the Indian Coast Guard and Surface-to-Air Vertical Launch - Shtil missiles for the Indian Navy in the presence of the Defence Secretary, Shri Rajesh Kumar Singh at South Block, in New Delhi on March 03, 2026


புதுடெல்லி, மார்ச் 03: 

இந்தியக் கடலோரக் காவல்படை மற்றும் கடற்படையின் கண்காணிப்பு மற்றும் தாக்குதல் திறனை வலுப்படுத்தும் வகையில், ரூ.5,083 கோடி மதிப்பிலான இரண்டு கொள்முதல் ஒப்பந்தங்கள் பாதுகாப்புத் துறை செயலாளர் திரு. ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் கையெழுத்தாகின.


1. 6 நவீன இலகுரக ஹெலிகாப்டர்கள் (ALH MK-II):

  • நிறுவனம்: இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (HAL), பெங்களூரு.
  • ஒப்பந்த மதிப்பு: ரூ.2,901 கோடி.
  • பயன்: 'உள்நாட்டிலேயே தயாரிப்போம்' (Atmanirbhar Bharat) திட்டத்தின் கீழ் இந்த 6 ஹெலிகாப்டர்கள் வாங்கப்படுகின்றன. இவை தற்போதுள்ள ஹெலிகாப்டர்களை விட மேம்பட்ட அதிநவீன அம்சங்களைக் கொண்டிருக்கும்.
  • சிறப்பம்சங்கள்: இவை கரையோர விமான தளங்கள் மற்றும் கடலில் உள்ள போர்க்கப்பல்கள் என இரண்டிலிருந்தும் இயங்கும் திறன் கொண்டவை. கடல்சார் பாதுகாப்பு மற்றும் தேடுதல் பணிகளை இது மேலும் வலுப்படுத்தும்.

2. ஷ்தில் (Shtil) ஏவுகணைகள் கொள்முதல்:

  • நிறுவனம்: ரஷ்யாவின் ரோசோபோரோனெக் ஸ்போர்ட் (JSC Rosoboronexport).
  • ஒப்பந்த மதிப்பு: ரூ.2,182 கோடி.
  • பயன்: இவை தரையிலிருந்து வான் இலக்குகளைச் செங்குத்தாகச் சென்று தாக்கக்கூடியவை (Surface-to-Air Missiles).
  • சிறப்பம்சங்கள்: போர்க்கப்பல்களின் வான் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் இந்த ஏவுகணைகள், அனைத்துக் காலநிலைகளிலும் மிக விரைவாகச் செயல்படும் தன்மை கொண்டவை. இதன் மூலம் இந்தியா - ரஷ்யா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் விளக்கம்:

இந்த புதிய கொள்முதல் மூலம் இந்தியக் கடற்படைத் தளங்களின் வான் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், கடல் எல்லைகளில் எதிரிகளின் அச்சுறுத்தலை விரைவாக முறியடிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஒப்பந்தங்களும் இந்தியாவின் கடல்சார் இறையாண்மையைப் பாதுகாப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும்.

No comments

Thank you for your comments