ஆன்மீக நகரில் மதுபானக் கூடங்களா? - காஞ்சிபுரத்தில் 'மனமகிழ் மன்றம்' அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு!
💞 மீண்டும் காதல் 💞🔥 "காதலித்து மணந்த மணிகண்டன் - திவ்யா, இன்று விவாகரத்து கோரி நீதிமன்றத்தில்! விட்டுக்கொடுக்காத ஈகோவும், மௌனப் போராட்டமும் அவர்களைப் பிரிவின் விளிம்பிற்குத் தள்ளுகிறது. பிரியும் தருவாயில் அவர்கள் உணர்ந்த அந்த ஒரு உண்மை, அவர்கள் வாழ்க்கையை மாற்றியதா? நீதிமன்றத்தின் தீர்ப்பை விட, மனசாட்சியின் தீர்ப்பு வலிமையானதா? ஈகோவைத் தூக்கியெறிந்துவிட்டு அவர்கள் மீண்டும் இணைந்தார்களா அல்லது மௌனம் வென்றதா? காதலின் ஆழத்தை உணர்த்தும் ஒரு எதார்த்தமான படைப்பு!"💞 இன்றைய தம்பதிகளின் நிஜப் பிரச்சனையைத் திரையில் காட்டும் முயற்சி.Watch the film
குடியிருப்புவாசிகள் அச்சம்:
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய ரயில் நிலையத்திலிருந்து வையாவூர் செல்லும் சாலையில், மூவேந்தர் நகர் பகுதியில் புதிதாக ஏசி வசதியுடன் கூடிய மதுபான பார் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
இந்தத் தகவலால் அதிர்ச்சியடைந்த இப்பகுதியைச் சுற்றியுள்ள:
- அண்ணா குடியிருப்பு
- மீனாட்சி நகர்
- சொர்ணா நகர்
- காமாட்சி நகர்
- அய்யன் திருவள்ளூர் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 5000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் பாதிப்பு:
இப்பகுதியில் இரண்டு பிரபல தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. தினமும் 2000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயில இந்தப் பாதையையே பயன்படுத்தி வருகின்றனர். மதுபானக் கூடம் அமைக்கப்பட்டால் மாணவர்களின் பாதுகாப்பிற்கும், ஒழுக்கத்திற்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் எனப் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட பொதுமக்கள்:
மதுபான பார் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றிணைந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, மக்களின் நலன் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருதி அந்தப் புதிய மதுபானக் கடைக்கு அனுமதி அளிக்கக்கூடாது என வலியுறுத்தி மனு அளித்தனர்.
திடீரென நூற்றுக்கணக்கான மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆன்மீக நகரத்தின் அமைதியைக் குலைக்கும் வகையில் மதுபானக் கூடங்கள் அதிகரிப்பதைத் தடுக்க வேண்டும் என்பதே காஞ்சி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
No comments
Thank you for your comments