Breaking News

"சொன்னதைச் செய்வார் ஸ்டாலின்": காஞ்சிபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சார அதிரடி!


 காஞ்சிபுரம் | மார்ச் 30, 2026

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக வேட்பாளர்களை ஆதரித்துத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காஞ்சிபுரத்தில் தனது முதல் கட்டத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

அண்ணா சிலைக்கு மரியாதை:

பிரச்சாரத்தைத் தொடங்கும் முன்பாக, காஞ்சிபுரத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் இல்லத்திற்குச் சென்ற உதயநிதி ஸ்டாலின், அங்குள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு:

காஞ்சிபுரம் தேரடி பகுதியில் திறந்த ஜீப்பில் நின்றவாறு உரையாற்றிய அவர், காஞ்சிபுரம் தொகுதி வேட்பாளர் நித்யா சுகுமார் மற்றும் உத்தரமேரூர் தொகுதி வேட்பாளர் க. சுந்தர் ஆகியோருக்கு 'உதயசூரியன்' சின்னத்தில் வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.


உதயநிதி ஸ்டாலின் உரையின் முக்கிய அம்சங்கள்:

  • மகளிர் விடியல் பயணம்: "2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்தே மகளிருக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம்தான்."
  • உரிமைத்தொகை உயர்வு: தற்போது 31 லட்சம் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ₹1,000 உரிமைத்தொகை, மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் ₹2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • கல்விச் சாதனைகள்: 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆட்சியில் இது 35 லட்சம் மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்படும். காலை உணவுத் திட்டம் தற்போது 5-ம் வகுப்பு வரை உள்ள நிலையில், இனி 8-ம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும்.
  • முதியோர் உதவித்தொகை: முதியோர்களுக்கான உதவித்தொகை ₹1,000-லிருந்து ₹2,000 ஆக உயர்த்தப்படும்.
  • காஞ்சிபுரத்திற்கான திட்டங்கள்: காஞ்சிபுரம் நகராட்சியை மாநகராட்சியாக மாற்றியது திமுக அரசுதான். ₹300 கோடியில் பாதாளச் சாக்கடைத் திட்டம் மற்றும் திருப்பாற்கடல் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏகாம்பரநாதர் கோயில் திருப்பணிகளுக்கு ₹30 கோடி ஒதுக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் மீது விமர்சனம்:

"தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி அவர்கள் மோடியின் அடிமையாக இருந்து வருகிறார். தமிழகத்தை ஒதுக்கும் மோடியை நாம் ஒதுக்கி வைக்க வேண்டும். அமித்ஷா, மோடி ஆகியோரைத் தமிழகத்தில் நுழைய விடாதீர்கள்," என ஆவேசமாக உரையாற்றினார்.

No comments

Thank you for your comments