Breaking News

மழலையர் பட்டமளிப்பு விழா உற்சாகம்...!

கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ நேரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பள்ளி பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் தலைவர் மகாவீர் போத்ரா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பள்ளி முதல்வர் ஜி. பங்கஜ் வரவேற்புரை நிகழ்த்தினார்.



இறை வழிபாட்டுடன் தொடங்கிய விழாவில் தலைவர் மகாவீர் போத்ரா, துணைத் தலைவர் கமலேஷ் சி. பாப்பனா, செயலாளர் கோபால் புராடியா ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.



தொடர்ந்து மழலையர் குழந்தைகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. பிஞ்சு குழந்தைகள் பட்டம் பெற்றதை கண்ட பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.அதனைத் தொடர்ந்து பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் திருமதி தீபலட்சுமி ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். பின்னர் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

📝 செய்தியாளர்: லீலாகிருஷ்ணன்📱99942 55455

No comments

Thank you for your comments