Breaking News

அண்ணா நினைவு நாள்: காஞ்சிபுரத்தில் ஓ.பி.எஸ் அணி சார்பில் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை - அன்னதானம் வழங்கல்!

 

காஞ்சிபுரம், பிப். 3: 

பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு தினத்தையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் அக்கட்சியினர் திரளாகப் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

தலைமையேற்ற மாவட்டச் செயலாளர்:

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் ஆணைக்கிணங்க, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் முத்தியால்பேட்டை இ.ஆர்.வி. ரஞ்சித்குமார் தலைமையில் கட்சியினர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்குச் சென்றனர். அங்குள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

ஏழைகளுக்கு அன்னதானம்:

மரியாதை செலுத்தும் நிகழ்வைத் தொடர்ந்து, நினைவு இல்லம் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு மாவட்டச் செயலாளர் ரஞ்சித்குமார் முன்னிலையில் காலை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.

பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள்:

இந்நிகழ்வில் அமைப்புச் செயலாளர் K. கோபால், பொருளாளர் A. வஜ்ரவேலு, ஷகிலா மற்றும் ஒன்றிய செயலாளர்கள் J. முனிரத்தினம், A. மாலிக் பாஷா, மாகரல் சசி, விஜயன், அருண் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், பேரூராட்சி செயலாளர்கள் ஜெயகாந்தன், குலசேகரன், ரவிக்குமார், மாவட்ட அணி நிர்வாகிகள் பூக்கடை ஜெகா, சதீஷ், சந்திரசேகர், ஜெயபிரகாஷ், ராஜ்குமார், விமல், சக்திவேல் உள்ளிட்ட ஏராளமான கழகத் தொண்டர்கள் பங்கேற்று அண்ணாவுக்குத் தங்களது மரியாதையைச் செலுத்தினர்.


No comments

Thank you for your comments