காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா நினைவு தினம்: திமுகவினர் பிரம்மாண்ட அமைதிப் பேரணி - அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு!
காஞ்சிபுரம், பிப். 3:
அமைதிப் பேரணி:
காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலாளரும், உத்தரமேரூர் எம்.எல்.ஏ-வுமான க. சுந்தர் தலைமையில் இந்த அமைதிப் பேரணி நடைபெற்றது. காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள பெரியார் தூணிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணி, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மாநகராட்சி அலுவலகம் முன்புள்ள அண்ணாவின் உருவச்சிலை அருகே நிறைவு பெற்றது.
அங்கு, அண்ணாவின் உருவச்சிலைக்கு எம்.எல்.ஏ-க்கள் க. சுந்தர், எழிலரசன், மேயர் எம். மகாலட்சுமி யுவராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ஏகாம்பரநாதர் கோயிலில் சமபந்தி விருந்து:
அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் காஞ்சிபுரம் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் கோயிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். இந்த நிகழ்வில் எம்.எல்.ஏ-க்கள் க. சுந்தர் மற்றும் எழிலரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பங்கேற்பாளர்கள்:
இந்நிகழ்வுகளில் மாநகர செயலாளர் சி.கே.வி. தமிழ்ச்செல்வன், துணைச் செயலாளர் வ. ஜெகன்னாதன், மாவட்ட பொருளாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் எம்.எஸ். சுகுமார், ஒன்றிய செயலாளர்கள் குமார், படுநெல்லி பாபு, மாமன்ற மண்டலக்குழு தலைவர் சந்துரு மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments