வாலாஜாபாத்தில் திமுக சமத்துவப் பொங்கல்! மூத்த நிர்வாகிகளுக்குப் பரிசு வழங்கிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் - உரியடி அடித்துத் தொடங்கிய எழிலரசன் எம்.எல்.ஏ.
வாலாஜாபாத் | ஜனவரி 10, 2026
உரியடி மற்றும் பொங்கல் கொண்டாட்டம்:
வடக்கு ஒன்றியச் செயலாளர் படுநெல்லி. பாபு ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவைக் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் உரியடி அடித்து உற்சாகமாகத் தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் எம்.பி க.செல்வம் மற்றும் உத்தரமேரூர் எம்.எல்.ஏ க.சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பங்கேற்பு:
வேளாண்துறை அமைச்சரும், மாவட்டத் தேர்தல் பொறுப்பாளருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, கட்சிப் பணியில் நீண்டகாலம் ஈடுபட்டு வரும் மூத்த நிர்வாகிகளுக்கு இலவசமாக வேட்டி, சட்டை மற்றும் சேலைகள் அடங்கிய பொங்கல் பரிசுகளை வழங்கினார். பின்னர் நடைபெற்ற பிரம்மாண்ட அன்னதானத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
வீர விளையாட்டுகள் மற்றும் போட்டிகள்:
விழாவின் ஒரு பகுதியாக மகளிர் அணி மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகளுக்குக் கயிறு இழுக்கும் போட்டி உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினர்களும் பரிசுகளையும் இனிப்புகளையும் வழங்கிப் பாராட்டினர்.
இந்நிகழ்வில் வாலாஜாபாத் ஒன்றியக் குழுத் தலைவர் தேவேந்திரன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் வெங்கட்ராமன், கவிதா டெல்லி பாபு உள்ளிட்ட திமுகவின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
No comments
Thank you for your comments