Breaking News

காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் சிலை மோசடி: 312 சவரன் தங்கம் மாயம்! நீதிமன்ற ஆவணங்களால் அம்பலமான பகீர் உண்மைகள்.


 காஞ்சிபுரம் | ஜனவரி 7, 2026

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் கடந்த 2015-ஆம் ஆண்டு புதிய உற்சவர் சிலைகள் செய்ததில் சுமார் 312 சவரன் தங்கம் மோசடி செய்யப்பட்டிருப்பது நீதிமன்ற ஆவணங்கள் மூலம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி: 

கோயிலின் பழமையான உற்சவர் சிலைகளுக்குப் பதிலாக, தங்கம் உள்ளிட்ட ஐம்பொன்களால் ஆன 55 கிலோ எடையுள்ள புதிய சிலைகளைச் செய்ய அறநிலையத்துறை முடிவெடுத்தது. இதற்காகப் பக்தர்களிடமிருந்து தங்கம் வசூலிக்கப்பட்டது. ஆனால், புதிய சிலைகளில் தங்கம் கலக்கப்படாமல் மோசடி நடந்துள்ளதாகக் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் புகார் அளித்தார்.

தங்கம் இல்லை என உறுதி: 

இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, ஐஐடி (IIT) நிபுணர்கள் மூலம் சிலைகள் ஆய்வு செய்யப்பட்டன. அந்த ஆய்வில், புதிய சிலைகளில் தங்கம் துளியும் பயன்படுத்தப்படவில்லை என்பது அறிவியல் பூர்வமாகத் தெரியவந்தது.

நீதிமன்ற ஆவணங்கள் சொல்வது என்ன? 

காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில், கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி புகார் தாரரிடம் வழங்கப்பட்ட ஆவணங்களின் மூலம் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன:

  • புதிய சிலைகள் செய்ய சுமார் 312.5 சவரன் தங்கம் வசூலிக்கப்பட்டுள்ளது.
  • வசூலிக்கப்பட்ட தங்கம் சிலைகளில் சேர்க்கப்படாமல் முழுமையாக மோசடி செய்யப்பட்டுள்ளது.
  • மோசடி செய்யப்பட்ட தங்கத்தின் இன்றைய சந்தை மதிப்பு சுமார் ரூ. 3.12 கோடி ஆகும்.

அடுத்தக்கட்ட விசாரணை: 

இந்த வழக்கில் அறநிலையத்துறை முன்னாள் அதிகாரிகள், ஸ்தபதி மற்றும் அர்ச்சகர்கள் உட்பட 11 பேர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு மீண்டும் வரும் பிப்ரவரி 2-ஆம் தேதி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

No comments

Thank you for your comments