செங்கல்பட்டு: பிரதமர் வருகை - ஜி.எஸ்.டி சாலையில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் தடையின்றி செல்லலாம்!
செங்கல்பட்டு, ஜன. 22:
போக்குவரத்து கட்டுப்பாடு:
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நாளை (23.01.2026) பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாளை காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை, ஜி.எஸ்.டி சாலை வழியாகச் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இதர போக்குவரத்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ஆட்சியர் அறிவிப்பு:
இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா வெளியிட்டுள்ள அறிவிப்பில்:
கனரக வாகனங்களுக்குப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும், மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் வழக்கம்போல் ஜி.எஸ்.டி சாலை வழியாகவே செல்லலாம்.
அதேபோல், அவசர கால ஊர்திகள் (ஆம்புலன்ஸ்) எவ்விதத் தடையுமின்றி அதே பாதையில் பயணிக்க அனுமதிக்கப்படும்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்புப் பணிகளுக்காக ஆயிரக்கணக்கான போலீஸார் மதுராந்தகம் மற்றும் ஜி.எஸ்.டி சாலைப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments
Thank you for your comments