விருத்தாசலத்தில் கொடூரம்: 5 பவுன் நகைக்காக 75 வயது மூதாட்டி அடித்துக் கொலை! சடலத்தை ஓடையில் வீசிவிட்டுத் தப்பிய மர்ம நபர்கள்.
விருத்தாசலம் | டிசம்பர் 24, 2025
சம்பவத்தின் பின்னணி: பரவலூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவரின் மனைவி கஸ்தூரி (75). இவர் விவசாயம் செய்து கொண்டு, தனது விளைநிலத்திற்கு அருகிலேயே வீடு கட்டி வசித்து வந்தார். கஸ்தூரி எப்போதும் தனது கழுத்தில் 5 பவுன் தங்கச் சங்கிலி அணிந்திருப்பார் என்று கூறப்படுகிறது.
அதிகாலையில் நடந்த பயங்கரம்: இன்று அதிகாலை கஸ்தூரி தனது வீட்டில் பசு மாட்டில் பால் கறந்து கொண்டிருந்தார். அப்போது அவரை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கஸ்தூரியின் மண்டையைத் தாக்கி கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். பின்னர் அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையைப் பறித்துக் கொண்ட அந்த கும்பல், ஆதாரங்களை மறைக்க முதியவரின் உடலை அருகில் இருந்த ஓடையில் வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர்.
தற்போது தங்கத்தின் விலை சவரன் ஒரு லட்சத்தைத் தாண்டி விற்பனை ஆகி வரும் நிலையில், நகைக்கு ஆசைப்பட்டு மூதாட்டியை மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி மற்றும் படங்கள்: R.காமராஜ், விருத்தாசலம்.
No comments
Thank you for your comments