காஞ்சியில் எம்.ஜி.ஆர் நினைவுநாள்: 1,000 பேருக்கு 'ஆவி பறக்க' காலை உணவு! ஓபிஎஸ் அணியினர் நெகிழ்ச்சி ஆஞ்சலி.
காஞ்சிபுரம் | டிசம்பர் 24, 2025
மலர் தூவி மரியாதை:
காஞ்சிபுரம் காந்தி சாலை பகுதியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு, ஓ.பி.எஸ் அணி மாவட்டச் செயலாளர் முத்தியால்பேட்டை இ.ஆர்.வி. ரஞ்சித்குமார் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ஆவி பறக்க அன்னதானம்:
நினைவுநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் சுடச் சுட ஆவி பறக்க காலை உணவு வழங்கப்பட்டது. இட்லி, பொங்கல், வடை மற்றும் கேசரி என சுமார் ஆயிரம் பேருக்கு மாவட்டச் செயலாளர் ரஞ்சித்குமார் முன்னிலையில் அன்னதானம் வழங்கப்பட்டது. தாராளமாக வழங்கப்பட்ட இந்த உணவைப் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பெற்றுச் சென்றனர்.
பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள்:
இந்த நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர்கள் கே. கோபால், சோமமங்கலம் ரமேஷ், மாவட்ட நிர்வாகிகள் ஏ. வஜ்ரவேலு, ஷகிலா, ஏ. பழனி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
No comments
Thank you for your comments