Breaking News

வேப்பூர் அருகே பரபரப்பு: ஐ.ஜே.கே நிர்வாகி வீட்டில் 15 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணம் கொள்ளை!

 

வேப்பூர், டிசம்பர் 20:

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள நிறாமணி கிராமத்தில், அரசியல் கட்சி நிர்வாகி ஒருவரின் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சம்பவம் குறித்து விரிவான தகவல்:

வேப்பூர் தாலுகா, நிறாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவேல் என்பவரது மகன் சுரேஷ் (41). இவர் ஐ.ஜே.கே (IJK) கட்சியின் நல்லூர் ஒன்றிய தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

நேற்று (19.12.2025) இரவு, சுரேஷின் குடும்பத்தினர் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த நான்கு பீரோக்களையும் கடப்பாரை போன்ற ஆயுதங்களால் உடைத்து, அதில் வைக்கப்பட்டிருந்த வைரத்தோடு உட்பட மொத்தம் 15 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1,00,000 ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

காவல்துறை விசாரணை:

இன்று காலை தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திட்டக்குடி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. பார்த்திபன் அவர்கள் தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

வேப்பூர் காவல் ஆய்வாளர் திரு. பழனிச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் தடயங்களைச் சேகரித்து, மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்களின் உதவியுடன் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்றுள்ள இந்தத் துணிகரக் கொள்ளை அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

✍️ செய்தியாளர் : R. காமராஜ்
📞 தொடர்பு : 9080215691

Rasi Palan

🌿 மேஷம் முதல் மீனம் வரை |
2026-ம் ஆண்டு ராசி பலன்கள்

நற்பலன்களை பெற என்ன செய்யவேண்டும்..  பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும்  | தவறாமல் படிக்கவும் ⚡

🛒 புதிய தகவல் இதோ 👇

 

No comments

Thank you for your comments