Breaking News

திட்டக்குடி விபத்து: பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு! காரில் வந்த 7 பேரும் பலி - அரசு மருத்துவமனைக்கு விரைந்து வருகிறார் மாவட்ட ஆட்சியர்.

 திட்டக்குடி | டிசம்பர் 24, 2025

திட்டக்குடி அருகே ராமநத்தம் - எழுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று நிகழ்ந்த பயங்கர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது என்ற சோகமான செய்தி வெளியாகியுள்ளது.

விபத்தின் தற்போதைய நிலவரம்: திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து டயர் வெடித்ததில், கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் வந்த கார் மீது மோதியது. இதில் காரில் பயணம் செய்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், பேருந்தில் பயணம் செய்தவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.

ஆட்சியர் நேரில் ஆய்வு: காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்தவுடன், 




கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அவசரமாகத் திட்டக்குடிக்கு விரைந்து வருகிறார். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை நேரில் பார்வையிட்டு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

சோகத்தில் திட்டக்குடி: உயிரிழந்தவர்களின் உடல்கள் திட்டக்குடி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன. பலியானவர்கள் யார் என்ற விவரங்களைச் சேகரிப்பதில் ராமநத்தம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

ஒரே விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் திட்டக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி மற்றும் படங்கள்: R.காமராஜ், விருத்தாசலம்.


2026-ம் ஆண்டு: குபேர யோகம் பெறப்போகும் ராசிகள் எவை | 2026 Career & Finance Horoscope|  @K24AstroTv 

No comments

Thank you for your comments