காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் பாஜகவினர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு! ஷெல்வி தாமோதரன் பிறந்தநாளையொட்டி சிறப்புப் பிரார்த்தனை.
காஞ்சிபுரம் | டிசம்பர் 26, 2025
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் பாஜக ஆன்மீக மேம்பாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவர் ஷெல்வி தாமோதரன் அவர்களின் பிறந்தநாளையொட்டி, பாஜகவினர் தங்க ரதம் இழுத்து வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினர்.
சிறப்பு வழிபாடு: பாஜக மாவட்ட ஆன்மீகப்பிரிவு தலைவர் ஆறுமுகம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். இந்த வழிபாட்டில் பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் கே.பத்மனாபன், ஓபிசி அணி மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆன்மீகப்பிரிவு நிர்வாகிகள் பலரும் திரளாகக் கலந்து கொண்டனர்.
தங்கரத உலா: வழிபாட்டின் முக்கிய நிகழ்வாக, லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம்மன் தங்கத்தேரில் எழுந்தருளினார். மேளதாளங்கள் முழங்க, ஆலயத்தின் உட்பிரகாரத்தில் தங்க ரதம் வலம் வந்தது. இதில் கலந்துகொண்ட பக்தர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அம்மனைத் தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுக்கொண்டனர்.
No comments
Thank you for your comments