Breaking News

முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் காஞ்சிபுரம் வருகை - ஏகாம்பரநாதர் தங்கத்தேர் சிற்பிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவிப்பு



 காஞ்சிபுரம், டிசம்பர் 5:

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் மனைவி  துர்கா ஸ்டாலின், காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவர் மணிமண்டபம் சென்றார். அவருக்கு ஏகாம்பரநாதர் இறை பணி அறக்கட்டளை நிர்வாகிகள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.

மகா பெரியவர் மணிமண்டபத்தில் தரிசனம்

மணிமண்டபத்தின் முன்பு தர்மபுரம் ஆதீனத்தின் யானை நின்றிருந்தது. துர்கா ஸ்டாலின் யானைக்கு பழங்கள் வழங்கி ஆசீர்வாதம் பெற்றார். பின்னர், மணிமண்டப நிர்வாக அறங்காவலர் மணி ஐயர், மணிமண்டபத்தின் கட்டிட சிறப்புகள் மற்றும் அமைப்புகளை விரிவாக விளக்கினார்.

தொடர்ந்து, துர்கா ஸ்டாலின் மகா பெரியவர் சுவாமிகளை தரிசனம் செய்து வழிபட்டார்.

தங்கத்தேர் யாகசாலை பூஜை தொடக்கம்

ஏகாம்பரநாதர் கோவிலின் தங்கத்தேர் வெள்ளோட்டம் தொடர்பாக நடைபெற்ற யாகசாலை பூஜைகளை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் விழாவில் பங்கேற்ற சிற்பிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார்.

நிகழ்வில் பங்கேற்றோர்

இந்த நிகழ்வில்,

  • காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் சிதம்பரநாத ஞானதேசிக பரமாச்சாரியார்
  • காஞ்சிபுரம் மேயர் எம். மகாலட்சுமி
  • திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எம். எஸ். சுகுமார்
  • ஏகாம்பரநாதர் இறை பணி அறக்கட்டளை நிர்வாகி மகாலட்சுமி சுப்பிரமணியம்
  • வலசை ஜெயராமன், பத்மநாபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments

Thank you for your comments