Breaking News

விருத்தாசலத்தில் ஓய்வூதியர் தின விழா எழுச்சி: "ஒன்றிய அரசின் பென்ஷன் திட்டத்தால் ஆபத்து" - மாநில செயலாளர் கோ. பழனி எச்சரிக்கை!


 விருத்தாசலம் | டிசம்பர் 21, 2025

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் "ஓய்வூதிய தின விழா" ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தலைமை மற்றும் முன்னிலை: சங்கத்தின் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, மாவட்டத் துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில செயற்குழு உறுப்பினர் டென்சிங், மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில செயலாளர் உரை: சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாநில செயலாளர் கோ. பழனி அவர்கள் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது:

"17.12.1982 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பே ஓய்வூதியர்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்தியது. ஆனால், தற்போது ஒன்றிய அரசால் நமது ஓய்வூதியத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

2025 மார்ச் மாதம் கொண்டுவரப்பட்ட புதிய பென்ஷன் திருத்தத் திட்டம், ஓய்வூதியர்களிடையே பாகுபாட்டை உருவாக்கியுள்ளது. இது நம்மை அரசின் கருணையை எதிர்நோக்கி வாழும் நிலைக்கு தள்ளியுள்ளது. நமது உரிமையைப் பாதுகாத்திடவும், தற்போது பணியில் உள்ள அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைத்திடவும் நாம் தொடர்ந்து போராட வேண்டும். 'ஓய்வு பெற்றவர்கள் என்றால் ஓய்பவர்கள் அல்ல' என்பதை நாம் நிரூபிக்க வேண்டும்."

இவ்வாறு அவர் சூளுரைத்தார்.

பங்கேற்பாளர்கள்: இந்த நிகழ்வில் மேனாள் மாவட்ட தலைவர் வீராசாமி, மாநிலத் துணைத் தலைவர் வெங்கடாஜலம், விருத்தாசலம் துணை குழு தலைவர் ராஜலிங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முத்துக்கிருஷ்ணன், ராமலிங்கம், சீனு சந்திரா, சின்னசாமி, கண்ணன், ஓய்வு பெற்ற வட்டாட்சியர் அண்ணாதுரை உள்ளிட்ட ஏராளமான ஓய்வூதியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்: R.காமராஜ், விருத்தாசலம்.

No comments

Thank you for your comments