Breaking News

🏠 இலவச வீட்டுமனை பட்டா கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா: விருத்தாசலத்தில் சிபிஎம் அதிரடி போராட்டம்!


 விருத்தாசலம், டிசம்பர் 18:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) சார்பில் இன்று (டிசம்பர் 18) மனு கொடுக்கும் போராட்டம் மற்றும் தர்ணா நடைபெற்றது.

கோரிக்கைகள்:

விருத்தாசலம் வட்டத்திற்கு உட்பட்ட புலியூர், கோ. பூவனூர், முகுந்தநல்லூர், மற்றும் சின்னவடவாடி ஆகிய கிராமங்களில் வசிக்கும் நிலமற்ற ஏழை மக்களுக்கு உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


தலைமை மற்றும் பங்கேற்பாளர்கள்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்பையன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் குமரகுரு, நகர செயலாளர் வழக்கறிஞர் சங்கரய்யா, வழக்கறிஞர் சந்திரசேகர், மற்றும் தொழிற்சங்க தலைவர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெரியசாமி, வீராசாமி, இதயத்துல்லா, கவிதா, ஆண்டனி, மரியா ஜோசப் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், பாதிக்கப்பட்ட பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

பரபரப்பான தர்ணா போராட்டம்:

ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக வட்டாட்சியரிடம் மனு அளிக்கச் சென்றபோது, வட்டாட்சியர் அரவிந்தன் அலுவலகத்திற்குள்ளேயே இருந்து கொண்டு, நீண்ட நேரமாக வெளியே வந்து மனுக்களைப் பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கட்சியினரும் பொதுமக்களும் அலுவலக வளாகத்திலேயே தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Rasi Palan

🌿 மேஷம் முதல் மீனம் வரை |
2026-ம் ஆண்டு ராசி பலன்கள்

நற்பலன்களை பெற என்ன செய்யவேண்டும்..  பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும்  | தவறாமல் படிக்கவும் ⚡

🛒 புதிய தகவல் இதோ 👇

 

இதனால் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்துத் தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் காவல்துறையினர், தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

📰 செய்தியாளர்: R. காமராஜ் (9080215691)

🔮 2026 புத்தாண்டு ராசி பலன் & பரிகாரம்: இந்த ஆண்டு உங்கள் அதிர்ஷ்டத்தை திறக்கும் ரகசியங்கள்!

















No comments

Thank you for your comments