Breaking News

விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி பாஜக பயிலரங்கம் மற்றும் மாநாடு நடைபெற்றது


கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி (பாஜக) பயிலரங்கம் மற்றும் மாநாடு, விருத்தாசலம் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி, தொகுதி அமைப்பாளர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் கோவிலானூர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.


மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் முன்னிலையில் கூட்டம்

இக்கூட்டம், மாவட்ட பொதுச் செயலாளர் R.M. கார்த்திகேயன், தொகுதி பொருளாளர் சுபஸ்ரீ தவபாலன், மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட செயலாளர் தங்க. வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. விருத்தாசலம் நகர தலைவர் அருள்ஜோதி வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில், விருத்தாசலம் ஒன்றிய தலைவர் பரமசிவம், கம்மாபுரம் ஒன்றிய தலைவர் லதா ஆறுமுகம், நல்லூர் ஒன்றிய தலைவர் கந்தன், மாநில செயற்குழு உறுப்பினர் அருள், கள்ளக்குறிச்சி மாவட்ட பார்வையாளர் ராஜ்குமார், அலுவலக செயலாளர் மதுசூதனன், கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் அக்னி கிருஷ்ணமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் வேட்டக்குடி எழிலரசன், மாநில செயலாளர் செல்வகுமார், மாவட்ட பார்வையாளர் – பிரச்சார பிரிவு ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், முன்னாள் மாநில துணைத் தலைவர் பாபு, மாவட்டத் தலைவர் பாலு, செந்தில் வேல்மணி, மேகலை, செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



மேலும், மாநில, மாவட்ட, அணி–பிரிவு நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், ஒன்றிய அணி மற்றும் பிரிவு நிர்வாகிகள், சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள், கிளைத் தலைவர்கள், கிளைச் செயலாளர்கள், BLO–2 பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

நன்றி உரை

நிகழ்ச்சியின் முடிவில், விருத்தாசலம் தெற்கு ஒன்றிய தலைவர் சங்கர் நன்றி உரையாற்றினார்.



No comments

Thank you for your comments