உலோகம் உருவாக்கம் மற்றும் தொழில்நுட்பத்திற்கான கண்காட்சி...!
இந்திய இயந்திரக் கருவி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆசியாவின் மிகப்பெரிய உலோக உருவாக்கம் மற்றும் உற்பத்தி தொழில்நுட்பங்களுக்கான கண்காட்சி, 2026 ஜனவரி 21 முதல் 25 ம் தேதி வரை, பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் நடத்துகிறது.
இக்கண்காட்சி குறித்து ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர கூட்டரங்கில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய இயந்திர கருவி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் மோகினி கெல்கர் கூறியதாவது இந்திய இயந்திரக் கருவி சந்தையில் உலோக உருவாக்கம் துறை (Metal Forming) 29% பங்களிப்பை கொண்டுள்ளது. இருப்பினும் வரும் காலங்களில், இத்துறை குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024–25 நிதியாண்டில் (FY25), உலோக உருவாக்கும் இயந்திரக் கருவிகளின் நுகர்வு 9,139 கோடி ரூபாயாக இருந்தது. அதேசமயம் உற்பத்தி மதிப்பு, ரூ.2,696 கோடியாகவும் இருந்தது.
ஒட்டுமொத்தமாக, உலோகம் உருவாக்கம் இயந்திர கருவிகளின் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு, சராசரியாக 6% அதிகரித்துள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் கருவிகளில், அழுத்தி கருவிகள் (presses) முதலிடத்தில் உள்ளன. அதை தொடர்ந்து பிரஸ் பிரேக்ஸ், வளைக்கும் இயந்திரங்கள், வெ ட்டும் இயந்திரங்கள் இடம்பெற்றுள்ளன என்றார்.
‘‘ லேசர், லேசர் சார்ந்த பயன்பாடுகள், ஃபைபர் லேசர் இயந்திரங்கள், 3D பிரிண்டிங் மற்றும் ரோபோட்டிக்ஸ் (Pick-and-place) போன்ற நவீன தொழில்நுட்பங்களுக்கு, கண்காட்சியில், அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இக்கண்காட்சி மூலம், 2026 ல், உள்நாட்டுத் தயாரிப்புகளின் உற்பத்தி மற்றும் அவற்றின் ஏற்றுமதியை விரைவுபடுத்தும், என்றார்.
செய்தியாளர்:லீலாகிருஷ்ணன்
📱 99942 55455


No comments
Thank you for your comments