கேஎம்சிஹெச்யின் 29-ம் ஆண்டு குழந்தைகள் இருதய நோய் விழிப்புணர்வுக்காக சிறப்பு கோவை மாரத்தான் 2025...!
கோவை மாவட்டம் முன்னணி பல்துறை மருத்துவமனையான கேஎம்சிஹெச் பல்வேறு வகையான நோய்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் வருடம் தோறும் கேஎம்சிஹெச் கோவை மாரத்தான் 2025” என்ற பெயரில் குழந்தைகள் இருதய நோய் பற்றிய விழிப்புணர்வுக்காக சிறப்பு மாரத்தான் நிகழ்ச்சியை நடத்திவருகிறது
தொடர்ந்து 29-ம் ஆண்டாக நடைபெற்ற இந்த மாரத்தான் நிகழ்ச்சி கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி கேஎம்சிஹெச் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கொடியசைத்து துவக்கி வைத்தார்
சூலூர் கேஎம்சிஹெச் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் துவங்கிய இந்த மாரத்தான் சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவினாசி சாலை கேஎம்சிஹெச் பிரதான மருத்துவ மையத்தில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதில் மருத்துவர்கள்,மருத்துவத் துறை சார்ந்தவர்கள், செவிலியர்கள், மாணவர்கள், உட்பட சுமார் 4000 பேர் கலந்துகொண்டனர் நிகழ்ச்சியை தொடர்ந்து மாராத்தான் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையும் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
📝 செய்தியாளர்:லீலாகிருஷ்ணன்📱 99942 55455

No comments
Thank you for your comments