ஜன.18 வரை வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்,காஞ்சிபுரம் ஆட்சியர் “Voters Help Line”
காஞ்சிபுரம், டிச.26:
காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த சிறப்பு முகாம் விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இதன் பின்னர் ஆட்சியர் கூறியது..
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜன.1 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க,நீக்க,திருத்த,முகவரி மாற்ற மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம்.
வாக்காளர்கள் இணையம் வழியாகவும் https://voters.eci.gov.in/ என்பதன் மூலமாகவும் “Voters Help Line” என்ற கைபேசி செயலி மூலமும் விண்ணப் பிக்கலாம்.விண்ணப்பங்கள் பூர்த்தி செய்தல்,இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில் சந்தேகம் ஏற்பட்டால் கட்டணமில்லா தொலைபேசி எண் 044}1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டும் விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
இணையவழியில் விண்ணப்பிக்க இயலாதவர்களாக இருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க,நீக்க,திருத்த, முகவரி மாற்ற மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புவோர் அதற்கான விண்ணப்பங்களை வரும் ஜனவரி 18 ஆம் தேதிக்குள் வருவாய்த்துறை அலுவலர் அலுவகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களிலும் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் டிச.27,டிச.28 மற்றும் ஜன.3,ஜன.4 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்களும் நடைபெறுவதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.
விழிப்புணர்வு பேரணி தொடக்க விழாவின் போது காஞ்சிபுரம் சார் ஆட்சியர் ஆஷிக்அலி, மாநகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள்,பள்ளி,கல்லூரி மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments