Breaking News

அருள்மிகு எல்லை மாகாளியம்மன் திருக்கோவில் 10-ம் ஆண்டு விழா...!

கோவை மாவட்டம் எட்டிமடை பகுதியில் உள்ள அருள்மிகு எல்லை மாகாளியம்மன் திருக்கோவில் 10-ஆம் ஆண்டு விழா தலைமை அறங்காவலர் சி.கே.கண்ணன் தலைமையில் மிக கோலாகலமாக நடைபெற்றது.



இவ்விழாவில் வேள்விபணிகளை பேரூர் மணிவாசகர் அருட்பணி மன்றம் குமரலிங்கம் தலைமையில் நடைபெற்றது.10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும்,யாகங்களும், பூஜைகள் நடைபெற்றது.



இதனைத்தொடர்ந்து கோபால கிருஷ்ணன், சீனிவாசன்,ஜெயராம்,ரவி, ராமகிருஷ்ணன்,சீனிவாச மூர்த்தி, ஜெயந்த் பாலாஜி,பிரேமா,வெங்கடேஷ் ஆகியோர்களை எல்லை மாகாளியம்மன் திருக்கோவில் நிர்வாகிகள் கௌரவித்தனர்.இந்நிகழ்ச்சியில் நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி. அன்பரசன், பிரமுகர்கள், கோயில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் 5000த்திற்கு மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

📝 செய்தியாளர்:லீலாகிருஷ்ணன்📱 99942 55455

No comments

Thank you for your comments