விருத்தாசலத்தில் பாஜக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பயிலரங்க கூட்டம் நடைபெற்றது
விருத்தாசலத்தில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதிக்கான 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பயிலரங்க கூட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பாஜக கடலூர் கிழக்கு மாவட்ட விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதி அமைப்பாளர் கோவிலானூர் மணிகண்டன் தலைமையேற்றார்.
இந்த கூட்டத்தில், விருத்தாசலம் தொகுதியின் அனைத்து வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்றனர். வாக்குச்சாவடி நிலை நடவடிக்கைகள், தேர்தல் நாளில் முகவர்களின் பொறுப்புகள் மற்றும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வது தொடர்பாக விரிவாக விளக்கங்கள் வழங்கப்பட்டன.
மனுவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான சரியான பதில்களை எழுதிக் கொடுக்கும் விதம், திருமணம் காரணமாக இடம் மாறிய பெண்களின் வாக்குகளை நீக்கும் நடைமுறைகள், மரணமடைந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்கும் நடவடிக்கைகள் போன்றவை விரிவாக பேசப்பட்டன.
மேலும், விருத்தாசலம் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டால் வெற்றி பெறும் வகையில், ஒவ்வொரு நிலை முகவரும் தீவிரமாக உழைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள்:
No comments
Thank you for your comments