Breaking News

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர் தேர்வு: 4683 பேரில் 4048 பேர் தேர்வில் கலந்து கொண்டனர்


காஞ்சிபுரம் :

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) மூலம் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர் தேர்வு இன்று (09.11.2025) மாநிலம் முழுவதும் நடைபெற்றது.

அவ்வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்று தேர்வு மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. மாவட்டத்தில் மொத்தம் 4,683 தேர்வர்கள் பதிவு செய்திருந்தனர் — இதில் 3,630 ஆண்களும், 1,053 பெண்களும் அடங்குவர்.

தேர்வு நாளில் 3,121 ஆண்கள் மற்றும் 927 பெண்கள் கலந்து கொண்டனர். அதேசமயம், 509 ஆண்களும் 126 பெண்களும் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.

இத்தேர்வின் ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு பணிக்காக சுமார் 500 காவலர்கள் மற்றும் 40 அமைச்சுப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.



காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில் தேர்வு மையங்கள் பரிசோதிக்கப்பட்டு, தேர்வு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யப்பட்டது.


No comments

Thank you for your comments