Breaking News

ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் ஹைபெக் சிறப்பு கிளினிக் துவக்கம்...!

கோவை லட்சுமி மில் பகுதியில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை துறையில் ஒரு புதிய மைல்கல்லாக,பிரததியேக ஹைப் பர் தெர்மிக் இன்ட்ரா பெரிட்டோனியல் கீமோதெரபி சிறப்பு கிளினிக்,ஜி.கே.என். எம்.மருத்துவமனையில் உள்ள ஜிகேடி அரங்கில் தலைமை செயல் அதிகாரி டாக்டர்.ரகுபதி வேலுசாமி துவக்கி வைத்தார்.



புதிதாக துவங்கப்பட்டுள்ள இந்த மையம் தென்னிந்தியாவில் ஹைபெக் சிகிச்சைக்கான முக்கிய மையமாக கோவை மாநகரின் மருத்துவ திறனை மேலும் உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் புற்றுநோய் துறை தலைவர் டாக்டர்.பி. சிவநேசன் டாக்டர். பிரவீன் ரவிசங்கரன் (அறுவை புற்று நோயியல் நிபுணர்) மற்றும் டாக்டர். பி. அருள்ராஜ் (ரோபோடி க் மற்றும்  ஹைபெக் அறுவை சிகிச்சை நிபுணர்)ஆகியோர் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது



இதுவரை 25 ஹை பெக்சிகிச்சைகள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதால், ஜிகேஎன்எம். மருத்துவமனை இப்பகுதியில் முன்னணி மையமாக திகழ்கிறது.புதிய ஹைபெக் மையத்தில் அறுவை,புற்றுநோயியல்,மயக்க மருந்து,தீவிர சிகிச்சை,பிசியோ தெரபி,உணவியல் மற்றும் நோய்த் தடுப்பு நிபுணர்கள் ஒருங்கிணைந்து நோயாளிகளுக்கு முழுமையான பராமரிப்பை வழங்கவுள்ளனர்.ஹைபெக் சிகிச்சை கருப்பை, குடல், பெருங்குடல், இரைப்பை உள்ளிட்ட வயிற்றுப் பகுதியில் பரவும் புற்று நோய்களுக்கு வழங்கப்படும் நவீன சிகிச்சை முறையாகும்.

இதில் முதலில் சைட்டோரிடக்டிவ் அறுவை சிகிச்சை சிஆர்எஸ் மூலம் புற்றுக்கட்டிகள் அகற்றப்பட்டு, பின்னர் கட்டுப்படுத்தப்பட்ட வெப்ப நிலையில் வயிற்றுக்குள் கீமோதெரபி செய்யப்படுகிறது.இது புற்றுநோய் செல்களை நேரடியாக அழிப்பதோடு பக்க விளைவு களை குறைக்க உதவுகிறது. மேலும் ஒரே கூரையின் கீழ் பரிசோதனை,சிகிச்சை மற்றும் பிந்தைய பராமரிப்பு வசதிகள் அனைத்தும் ஒருங்கிணைந்த முறையில் வழங்கப்ப டுவது எங்கள் நோக்கமாகும். ஜி.கே. என்.எம்.மருத்துவமனை,வயிற்றுப் புற்றுநோய்களின் முன்னேற்றத்தை தாமதப்படுத்தும் இந்த சிகிச்சை குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே உருவாக்கும் முயற்சிகளையும் தொடங்கியுள்ளது என தெரிவித்தனர்.

செய்தியாளர்: லீலா கிருஷ்ணன் – 📱99942 55455


No comments

Thank you for your comments