யூனியன் பேங்க் ஆப் இந்தியா 107 வது நிறுவன தின விழா...
கோவை நவ இந்தியா பகுதி இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி டாக்டர் அப்துல் கலாம் அரங்கில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா 107வது நிறுவன தின விழா கோவை மண்டல தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் மற்றும் பிராந்திய தலைவர் எஸ்.எஸ்.லாவண்யா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பேங்க் ஆப் இந்தியா, 11-11-1919 அன்று சேத் சீதாராம் பொதார் நிறுவினார்.அன்று மகாத்மா காந்தியால் துவக்கி வைக்கப்பட்டது. வங்கியின் 107வது நிறுவன தின விழா கோவை, மும்பை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் உற்சாகமாக கொண்டாடிவருகின்றனர்.மும்பை விழாவில் நிதித்துறை சேவைகள் செயலர் நாகராஜூ முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு வளரும் பாரதத்தின் தொலைநோக்கு இயக்கத்திற்கு உதவிடும் இயக்கத்தின் இந்த ஆண்டின் கருப்பொருளான ஒன்றிணைந்து ஒளிரும் எதிர்காலத்தை உருவாக்குவோம் என்ற தலைப்பில் உரையாற்றியுள்ளதாகவும் இந்நிகழ்விற்கு வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் ஆஷீஸ் பாண்டே தலைமை தாங்கியுள்ள நிகழ்ச்சியில் செயற்குழு இயக்குநர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளதாக வங்கியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வங்கி பணியாளர்களின் இசைக்கச்சேரி நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் வாடிக்கையாளர்கள்,வங்கி பணியாளர்கள் மேனாள் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
செய்தியாளர்: லீலா கிருஷ்ணன் – 📱99942 55455


No comments
Thank you for your comments