Breaking News

காஞ்சிபுரம் வரதர் கோயிலில் ஆகம விதிகள் மீறப்படுவதாக குற்றச்சாட்டு, இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்




காஞ்சிபுரம், நவ.23:

காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயிலில் ஆகம விதிகள் மீறப்படுவது உட்பட பல்வேறு விதிமீறல்கள் நடப்பதாக கூறி  அதனைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணியின் மாநில செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஷ்,மாநில துணைத் தலைவர் பரமேசுவரன்,பாஜக ஆன்மீகம் மற்றும் மேம்பாட்டுப்பிரிவு மாநில தலைவர் ஷெல்வி தாமோதரன், பாஜக மாவட்ட தலைவர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கோயிலில் ஆகம விதிகள் முற்றிலும் புறக்கணிக்கப்படக்கடிய வகையில் கோயில் அலுவலர் செயல்படுகிறார். கோயிலில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் நீராடவும், அமாவாசை காலங்களில் தர்ப்பணம் செய்யவும் தடை விதிக்கப் பட்டள்ளது.கோயில் குளத்திற்கு வேலி போட்டு பூட்டியிருக்கிறது. 

தொல்லியல் துறைக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமல் கோயிலின் பாரம்பரிய அமைப்புக்கு சேதம் விளைவிக்கும் வகையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தரிசனக்கட்டணம் இல்லை என்று கூறி விட்டு பக்தர்களிடம் டோக்கன் மூலம் பணம் வசூலிக்கப்படுகிறது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் இந்து முன்னணி சார்பில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட விசுவஹிந்து பரிஷத் தலைவர் சிவானந்தம், ஆர்.எஸ்.எஸ்.மாநில பொறுப்பாளர் பிரகாஷ், இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்தோஷ் உட்பட இந்து முன்னணி நிர்வாகிகள், ஆன்மீக ஆர்வலர்கள் பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு வரதராஜசுவாமி கோயில் நிர்வாகத்துக்கு எதிரான கண்டனக் கோஷங்களையும் எழுப்பினார்கள்.




No comments

Thank you for your comments