Breaking News

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற இலவச ரேபிஸ் தடுப்பூசி முகாம் -காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் துவக்கி வைத்தார்



தமிழக முழுவதும் பெண்கள் இளைஞர்கள் என பலர் செல்ல பிராணிகளாக நாய், பூனை உள்ளிட்டவை வளர்த்து வருகின்றனர். 

இது மட்டுமல்ல அது தமிழகம் முழுவதும் உள்ள தெருக்களின் உள்ள நாய்களுக்கும் பொதுமக்கள் தங்களால் இயன்ற உணவு உதவிகளையும் செய்தும் வளர்த்தும் வருகின்றனர்.

சமீப காலமாக செல்லப்பிராணிகளால் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்களும் அதனால் உயிரிழப்புக்களும் ஏற்படுகிறது. 

இதற்கு முக்கிய காரணமாக ரேபீஸ் தடுப்பூசி நோய் உரிய காலத்தில் செலுத்தாதது . 

இந்நிலையில் பல்வேறு இடங்களில் அரசு,தொண்டு நிறுவனங்கள்,தன்னார்வலர்கள் சார்பில் பல்வேறு முகாம் இதற்காக நடைபெற்று வருகிறது.

 அந்த வகையில் காஞ்சிபுரம் அடுத்த கோனேரிக்குப்பம் ஊராட்சியில் உள்ள வையாவூர் சாலையில் தேஜஸ்வினி பெட் கேர் சென்டர் மற்றும் கேனைன்(CANINE)  பெட் டீலர் மற்றும் தமிழ்நாடு சில்லறை செல்லப்பிராணி கடை உரிமையாளர் நலச் சங்கம் சார்பில் இலவச ரேபீஸ் தடுப்பூசி முகாம்  நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்து, தடுப்பூசி செலுத்திக்கொண்ட செல்லப்பிராணி வளர்ப்போருக்கு செல்லப்பிராணிகளுக்கான உணவுப் பொருட்களையும் வழங்கினர்.

மேலும் கால்நடை மருத்துவர்களுக்கு செல்ல பிராணி வளர்ப்போருக்கு பல்வேறு ஆலோசனைகளையும் இம்முகாமில் வழங்கினர். இதில் நாய் மற்றும் பூனைகளை சிறுவர் முதல் பெரியவர் வரை எடுத்து வந்து பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இதுகுறித்து முகாம் நிர்வாகி கூறுகையில், அடுத்த கட்டமாக காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைந்து தெரு நாய்களுக்கு இலவச ரேபீஸ் ஊசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.


No comments

Thank you for your comments