Breaking News

வெங்காடு உலகநாதன் தாயாரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் - அதிமுக மு. அமைச்சர் வி. சோமசுந்தரம் வழங்கினார்

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வெங்காடு ஊராட்சியைச் சேர்ந்தவர், அதிமுகவின் மாவட்ட பிரதிநிதியும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான வெங்காடு பி.உலகநாதன்.

இவரது தாயாரான பி.முருகம்மாள் என்பவர் வெங்காடு ஊராட்சியின் முன்னாள் தலைவராக பதவி வகுத்துள்ளார்.


இந்நிலையில் கடந்த ஆண்டு உடல் நலக்குறைவினால் உயிரிழந்த தனது தாயார் முருகம்மாளின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக அதனை ஊர் பொது மக்களும் பயனடையும் வகையில் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியானது வெங்காடு ஊராட்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்காடு உலகநாதன் தலைமையில் வெங்காடு ஊராட்சியில் நடத்தப்பட்டது.

இதில் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்.எல்.ஏ, குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் மதனந்தபுரம் கே பழனி ஆகியோர் பங்கேற்று முருகம்பாளின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி நினைவஞ்சி செலுத்திய பின்பு, தாய்மார்களுக்கு சேலை, பெரியவர்களுக்கு வேட்டி சட்டை, தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டி, சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கிராம பொது மக்களுக்கு வழங்கினர்.

இதனைத்தொடர்ந்து இந்நிகழ்ச்சிக்கு வருகைப் புரிந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையிலான சுமார் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம பொதுமக்களுக்கு பந்தி போட்டு தல வாழை இலையில் சிக்கன 65 உடன் சுடச் சுட மட்டன் பிரியாணி என அசைவ வருந்தளித்து அனைவரையையும் மகிழ்வித்து நெகிழ்ச்சி அடைய செய்துள்ளார். வெங்காடு ஊராட்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்காடு உலகநாதன்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன், காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் களக்காட்டூர் ராஜி, மாவட்ட மாணவரணி செயலாளர் திலக்குமார், வார்டு உறுப்பினர்கள், ஊர் நாட்டாமைதாரர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.

No comments

Thank you for your comments