Breaking News

SIR எதிராக இந்திய தேசிய ஒற்றுமை இயக்கம் ஆர்ப்பாட்டம்..!

கோவை வடவள்ளி பேருந்து நிலையம் அருகில் இந்திய ஒற்றுமை இயக்கம் சார்பில் வாக்காளர் சிறப்பு திருத்தம் எஸ்.ஐ.ஆர்.க்கு எதிராகவும் தமிழ்நாடு தேர்தல் அலுவலகம் மற்றும் ஒன்றிய அரசு பாஜகவை கண்டித்து மேற்கு மண்டல செயலாளர் பேராசிரியர் காமராஜர், தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்பாட்டத்திற்கு இந்திய ஒற்றுமை இயக்கம் மாநில பொருளாளர் டென்னிஸ் கோவில் பிள்ளை முன்னிலை வகித்தார். இதுகுறித்து இந்திய ஒற்றுமை இயக்கம் மாநில பொருளாளர் டென்னிஸ் கோவில் பிள்ளை கூறுகையில் பிஜேபி அரசாங்கமும் தேர்தல் ஆணையமும் இணைந்தேன் மக்களின் வாக்குகளை கொள்ளையடித்து கொண்டிருக்கி றார்கள். திருட்டுத்தனமாக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பல வியூகங்களை வகுத்து வைத்துள்ளனர். எனவே தேர்தல் ஆணையத்தையே கலைக்க வேண்டும் என்று கூறினார்.



ஆர்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளர் களாக திமுக வ.ம சண்முகசுந்தரம், தந்தை பெரியார் திராவிட கழகம் கு. ராமகிருட்டிணன்,திராவிட தமிழர் கட்சி, வெண்மணி,விடுதலை சிறுத்தை கட்சி மாணிக்கம், மலரவன் புரட்சிகர இளைஞர் முன்னணி,தமிழக வாழ்வுரிமை கட்சி .சந்திரசேகரன் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமாரை கைது செய்ய வேண்டும் என்று கோசமிட்டனர் மேலும் ஒன்றிய அரசுக்கு எதிராகவும் பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.

 செய்தியாளர்:லீலாகிருஷ்ணன்

📱99942 55455

No comments

Thank you for your comments