தி கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியில்,16வது ஆண்டு விழா மற்றும் நிறுவனர் தின விழா -2025
கோவை கணபதி மணியகாரம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தி கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியில்,16வது பள்ளி ஆண்டு விழா மற்றும் நிறுவனர் தின விழா மிக பிரம்மாண்டமாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனரும் (டிஆர்டிஓ) எஸ்பிக் அமைப்பின் இயக்குனருமான டாக்டர் எம்.மாணிக்கவாசகம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளித்து சிறப்புரையாற்றி சிறப்பித்தார்.
இந்த நிகழ்வில் இசை, நடனம் மற்றும் நாடகம் உள்ளிட்ட பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.அவற்றில் பல்வேறு பாணிகள் மற்றும் கருப் பொருள்கள் இடம்பெற்றிருந்தன. பள்ளியின் ராக்பேண்ட் இசைக்குழுவின் மெல்லிசையான குழு நிகழ்ச்சிகள், அற்புதமான அசைவுகளுடன் கூடிய கத்தக். அதிலும் சிறப்பாக நரசிம்மா, ரோமன் போர் வீரர்கள்,இந்திய மேற்கு கலப்பு நடனங்கள் என ஒவ்வொன்றும் படைப்பாற்றலை கலாச்சார வெளிப்பாட்டுடன் இருந்தன.

கேம்ஃபோர் டியன்கள் தி சவுண்ட் ஆஃப் டுரூத் என்னும் சிந்தனையைத் தூண்டும் நாடகத்தின் மூலமாக பார்வையாளர் களைக் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
பிரம்மாண்டமான யூவி நிகழ்ச்சி பார்வையாளர்களை மயக்கி, பெற்றோர்கள் பாராட்டுகளைப் பெற்றது இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: லீலா கிருஷ்ணன் – 📱99942 55455
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!


No comments
Thank you for your comments