Breaking News

முன்னாள் அமைச்சர் அண்ணாமலையின் 109-வது பிறந்த நாள் விழா - படத்திற்கு மரியாதை 2500-பேருக்கு அன்னதானம்



காஞ்சிபுரம், நவ 21:

பேரறிஞர்  அண்ணாவின்  நண்பரும், காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏவின் பாட்டனாருமான, மறைந்த முன்னாள் அமைச்சர், சி.வி.எம். அண்ணாமலை 109-வது பிறந்த நாள் விழா நேற்று  நடந்தது .

மாநில கொள்கை பரப்பு செயலாளரும், காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏவுமான வக்கீல் ஏழிலரசன் தலைமை தாங்கினார். இதில் காஞ்சிபுரம், இரயில்வே சாலையிலுள்ள இல்லத்தில் அவரது படத்திற்கு, மாவட்டப் பொருளாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம், காஞ்சிபுரம் மாநகரச் செயலாளர் தமிழ்ச்செல்வன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமியுவராஜ், 

ஒன்றியச் செயலாளர் பி.எம்.குமார், படு நெல்லி பாபு, குமணன், பகுத செயலாளர்கள் கே.திலகர், எஸ்.சந்துரு, சு.வெங்கடேசன்,  குமணன், தலைமைக்  செயற்குழு உறுப்பினர் எம்.எஸ். சுகுமார்,  சுகுமாரன், வர்த்தக அணி துணை செயலாளர்கள் பி. சுந்தரவரதன், காஞ்சிபுரம் ஒன்றியக் குழுத் தலைவர் மலர்கொடி குமார், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத் தலைவர் ஆர்.கே. தேவேந்திரன் மற்றும் முன்னோடிகள் முன்னிலையில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ் தலைமை நிலைய பேச்சாளர் நாத்திகம் நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் அரவிந்த் குமார், ராம் பிரசாத், வினோத்குமார், கமலக்கண்ணன் மகளிரணி  செல்வி, விஜயா, விஜயா தனலட்சுமி , மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி  நிர்வாகிகள், வட்ட, கிளை பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். 

அதனைத்தொடர்ந்து,  பூக்கடைசத்திரம் பகுதியிலும்,  காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை எதிரிலும்,  புதுப்பாளையத் தெரு சந்திப்பு, பிள்ளையார்பாளையம் பகுதியிலும், சின்ன காஞ்சிபுரம், செட்டித்தெரு பகுதியிலும் பொதுமக்களுக்கு 5-இடங்களில் 2500-பேருக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டது


No comments

Thank you for your comments