விருத்தாசலத்தில் விசிக ஆதரவாளர்கள் சாலை மறியல் — திருமாவளவன் காரை அவமரியாதை செய்த சம்பவத்திற்கு கண்டனம்
விருத்தாசலம் :
கடலூர் மைய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் – குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரிக்கை..
விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் கடலூர் மைய மாவட்ட செயலாளர் பி.ஆர். நீதிவள்ளல் தலைமையில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விசிக நிர்வாகிகள் கலந்து கொண்டு, கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த சாலை மறியலால் விருத்தாசலம்–கடலூர் சாலையில் போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல செயலாளர் ராஜ்குமார், மண்டல துணை செயலாளர் ஐயாயிரம், நகர செயலாளர் முருகன், சத்தியவாடி பாஸ்கர், நகர துணை செயலாளர் வயலூர் இளங்கோவன், ஒன்றிய துணை செயலாளர்கள் தென்றல், கவியரசு, ஒன்றிய பொருளாளர் எழில்வான்சிறப்பு, வழக்கறிஞர்கள் மதுசூதனன், தன்ராஜ் சண்முகம், மணவாளநல்லூர் சங்கர், குமாரமங்கலம் ராஜி, பழனிச்சாமி, அய்யாதுரை, சந்தோஷ், செல்வம், மணிகண்டன், ஜூட் மணி, அருள் வளவன், கர்ணன், பாபுஜி, பிரேம், ரஞ்சித், ராகுல், ரமணா, வீரமணி, ஓவியர் விருதை வெங்கட், சந்துரு, அரவிந்தன், கண்ணன், அகத்தியர் பாலா, அய்யம்பெருமாள், செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்தியாளர் R. காமராஜ் – 9080215691
No comments
Thank you for your comments