கொட்டும் மழையிலும் காவலர்களுக்கு வீர வணக்க நாள் அஞ்சலி
காஞ்சிபுரம்
ஆண்டுதோறும் அக்டோபர் 21ம் நாள் காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
கடந்த 1959ம் ஆண்டு, இதே நாளில் லடாக் பகுதியில் Hot Springs என்ற இடத்தில். சீன இராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில், 10 மத்திய பாதுகாப்பு படைக் (CRPF) காவலர்கள் உயிரிழந்தனர்.
கடல் மட்டத்திலிருந்து, பதினாறாயிரம் அடி உயரத்தில், அன்று வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை போற்றும் வகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் எஸ் பி சண்முகம் தலைமையில் காவல்துறை உயரதிகாரிகள், முன்னாள் காவல்துறையினர் மற்றும் உயிரிழந்த காவல்துறை குடும்பத்தினர் என பல பங்கேற்று மலர்களை வைத்தும், மலர் தூவியும் துப்பாக்கிகள் குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர்.
மேலும் உனது வருங்காலத்திற்கு எனது தற்காலத்தை ஈந்தேன். நாளைய உன் விடியலுக்கு இன்று நான் மடியத் தயார் என்று கூறி இவ்வாண்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நம்மை விட்டுப் பிரிந்த 191 காவல்துறையினருக்கு, இவர்கள் விட்டுச் சென்ற பணிகளைச் செய்து முடிப்போம் என்று உறுதி பூண்டு, அவர்களின் வீரத் தியாகம் வீண்போகாது என்று இந்த காவலர் வீரவணக்க நாளில் உறுதிமொழி ஏற்போம் என எஸ் பி சண்முகம் வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
கொட்டும் மழையிலும் காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது நெகழ்ச்சியை அளித்தது.
No comments
Thank you for your comments