திருமாவளவன் காரை வழிமறித்தவரை கைது செய்ய வலியுறுத்தி – திடீர் ரயில் மறியல் போராட்டம்!
விருத்தாசலம் :
சென்னையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி.-யின் காரை வழிமறித்தவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவும், திருமாவளவனுக்கு பாதுகாப்பு வழங்கவும் வலியுறுத்தி, கடலூர் மேற்கு மாவட்டத்தின் முன்னாள் செயலாளர் தயா தமிழன்பன் தலைமையில் பலர் ஒன்று திரண்டு பெண்ணாடம் ரயில் நிலையத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திண்டுக்கல்லில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டம் நடைபெற்றது. இதனால் ரயில் சுமார் 10 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தை முடிக்கச் செய்தனர். பின்னர் நடைமேடையில் வந்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த போராட்டத்தில்,
- நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் குனத்தகையன்,
- முன்னாள் மாவட்ட செயலாளர் தயா தமிழன்பன்,
- ஒன்றிய பொருளாளர் ரமேஷ்,
- ஒன்றிய செயலாளர் காசி புயல்,
- ஆவட்டி நீதி வளவன்,
- பெண்ணாடம் நகர துணை செயலாளர் பண்ணீர்செல்வம்,
- இடைச்செருவாய் கணேசன், பரமேஸ்வரன்,
- ஆவட்டி ராஜேந்திரன், மீன்படையப்பா,
- ஆவட்டி முத்துசாமி, ஆவட்டி ராஜதுரை,
- திட்டக்குடி மணிகண்டன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments