Breaking News

அமைச்சரின் மகன் சென்ற கார், பைக் மீது மோதி விபத்து - வழக்கு பதிவு செய்யாத காவல்துறை!


விருத்தாசலம் :

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் அவர்களின் மகன் வெங்கடேசன் சென்ற கார் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கார் விபத்து

அமைச்சர் சி.வெ. கணேசனின் மகன் வெங்கடேசன், தனது காரில் விருத்தாசலம் அருகே பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் எதிரே வந்த ஒரு இருசக்கர வாகனத்துடன் கார் மோதி, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில், கார் ஓட்டுனரும் இருசக்கர வாகன ஓட்டுனரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.  

வழக்குப் பதிவு செய்யாத காவல்துறை

இந்த சம்பவம் குறித்து தெரிந்ததும், விருத்தாசலம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். எனினும், இருபுறமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதனால் எந்தவிதமான வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. பின்னர் இரு தரப்பினரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.


அப்பகுதியில் பெரும் பரபரப்பு 

இந்த விபத்து செய்தி பரவியதும், அமைச்சரின் மகன் தொடர்பாக நிகழ்ந்தது என்பதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.







No comments

Thank you for your comments