பாலாற்றில் வெள்ளப்பெருக்கு... வாலாஜாபாத் - அவலூர் தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை
இது மட்டும் இல்லாமல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலாறு மற்றும் செய்யாறு ஆகிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகின்றன. பாலாறு மற்றும் செய்யாறு ஆகிய ஆறுகளுக்கு ஜவ்வாது மலை மற்றும் ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் பெய்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பாலாறு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் இருந்து அவலூர் செல்லும் தரைப்பாலம் முற்றிலுமாக வாகன போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
🌿 மேஷம் முதல் மீனம் வரை | குரு அதிசார பெயர்ச்சி பலன்கள்
குரு உச்சம் பெறுவதால் பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் ! | தவறாமல் கேளுங்கள் ⚡
💛 புதிய தகவல் இதோ👆
வாலாஜாபாத் பாலாற்றில் 15,000 கன அடி நீர் செல்வதால் வாலாஜாபாத்தில் இருந்து அவலூர் மற்றும் அங்கம்பாக்கம், கம்பராஜபுரம், தம்மனூர், இளையனர் வேலூர், காவாந்தண்டலம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த பாலத்தில் கனரக வாகனங்கள் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் என அனைத்து விதமான வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மறுகரையில் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு, நடந்து சென்று பாலாறு பாலத்தை கடந்து வருகின்றனர். இந்த பாலம் தடைபட்டிருப்பதால் வாகனங்களில் இந்த பாலத்தை கடக்க வேண்டுமென்றால், 30 கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
வாலாஜாபாத் மற்றும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கக்கூடிய மிக முக்கிய பலமாக இந்த பாலம் இருந்து வருகிறது. இந்த பாலத்தை பயன்படுத்தி தான், தொழிற்சாலைக்குச் செல்லும் ஊழியர்கள், கட்டுமானம் மற்றும் உள்ளிட்ட தொழிலில் ஈடுபடும், தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். பாலத்தில் வாகனங்கள் செல்லாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு பாலாற்றில் சென்ற வெள்ளத்தின் போது இந்த பாலம் சேதமடைந்தது. அப்போது இந்த பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் சுமார் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வாலாஜாபாத் அவளூர் இடையிலான தரைப்பாலம் மட்டுமே அமைக்கப்பட்டது.
அப்போது உயர்மட்ட மேம்பாலம் அமைத்திருந்தால் இந்த பிரச்சனை இருந்திருக்காது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்: E. ஜாபர்
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon

No comments
Thank you for your comments