காஞ்சிபுரம் அருகே திண்ணைப்பள்ளிக் கூடத்தில் தீபாவளி நிகழ்ச்சி
காஞ்சிபுரம், அக்.19:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கத்தில் சங்கர மடம் சார்பில் திண்ணைப்பள்ளிக் கூடம் செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியிலும் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா கல்லூரி சார்பில் கலை, கலாச்சார பண்பாட்டு கல்வியுடன் நவீன அறிவியல் கல்வியும் கற்றுத்தரப்படுகிறது.
இத்திண்ணைப் பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற தீபாவளி நிகழ்ச்சி சங்கரா கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.
கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.பேராசிரியை மஞ்சுளா வரவேற்று பேசினார்.
ஆன்மீக சொற்பொழிவாளர் கே.ஆர்.விஜயா தித்திக்கும் தீபாவளி என்ற தலைப்பில் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் தீபாவளியின் சிறப்புகள், ஆன்மீக நம்பிக்கையையும் அதில் பொதிந்திருக்கும் அறிவியல் உண்மைகளையும் விளக்கினார்.
மாணவர்களுக்கு கல்லூரி சார்பில் தீபாவளிப் பண்டிகைக்கான இனிப்புகள், பட்டாசுகள், கல்வி உபகரணங்கள் ஆகியனவும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் சமூக சேவகர் ராமானுஜம் உட்பட திண்ணைப்பள்ளிக்கூட மாணவ, மாணவியர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், சங்கரா கல்லூரி பேராசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments