Breaking News

காஞ்சிபுரத்தில் மாணவர்கள் எழுதிய புத்தகங்களில் பிழைகள் திருத்தும் முகாம்


காஞ்சிபுரம், அக்.26:

பெரியகாஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய புத்தகங்களில் பிழைகள் திருத்தும் முகாம் எழுதுக அமைப்பு சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் எழுதுக எனும் அமைப்பு தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளி மாணவர்களை புத்தகம் எழுதுவது எப்படி என்று பயிற்சி வழங்குவதுடன் அவற்றை வெளியிட்டும் வருகிறது.

முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு வழிகாட்டியாக இருந்து புத்தகம் எழுதும் பயிலரங்கம் நடத்தப்பட்டு ஏராளமான மாணவர்கள் எழுதிய புத்தகங்கள் பெரியகாஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அவற்றை திருத்தும் முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் பல்வேறு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் தமிழ்ப் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவியர்கள்,தமிழ் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என மொத்தம் 75 பேர் பிழைகள் திருத்தும் முகாமில் கலந்து கொண்டு புத்தகங்களில் பிழைகள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர்.

முன்னதாக பிழைகள் திருத்துவது எப்படி என்ற கலந்துரையாடலும் நடைபெற்றது.இந்நிகழ்வுக்கு எழுதுக அமைப்பின் மூத்த ஒருங்கிணைப்பாளர் சுகுமார் தலைமை வகித்தார்.

தமிழ் ஆசிரியர்கள் அன்புச்செல்வி, பூங்குழலி, செண்பகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அமைப்பின் நிர்வாகி பாலச்சந்தர் வரவேற்று பேசினார். ஒரே நாளில் 75 புத்தகங்கள் திருத்தும் பணி நடைபெற்று முடிந்துள்ளதாகவும் மற்ற புத்தகங்களும் வெவ்வேறு நாட்களில் பிழை திருத்தும் பணி நடைபெறவுள்ளது.

திருத்தும் பணிகள் நிறைவு பெற்றதும் புத்தகங்கள் அனைத்தும் வெளியிடப்படும் எனவும் எழுதுக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிள்ளி வளவன் தெரிவித்தார்.

No comments

Thank you for your comments