Breaking News

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை நேரில் சென்று பார்வையிட்ட தெற்கு தொகுதி பார்வையாளரும் தகவல் தொழில்நுட்ப அணி மாநில இணை செயலாளருமான டாக்டர் மகேந்திரன் ...!

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 70 மற்றும் 83 -ல் எல்லோருக்கும் எல்லாம் திட்டத்தின் கீழ் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் பூ மார்க்கெட் பகுதியில் உள்ள ஐ எம் ஏ கூட்டரங்கில் நடைபெற்றது. 


இம்முகாமிற்கு தெற்கு தொகுதி பார்வையாளரும் தகவல் தொழில்நுட்ப அணி மாநில இணைச் செயலாளருமான டாக்டர் மகேந்திரன் கலந்துகொண்டு இம்முகாமினை பார்வையிட்டு மக்களின் குறைகளை நேரடியாக கேட்டு அறிந்து தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

முன்னதாக இந்த சிறப்பு முகாமை மத்திய மண்டல தலைவர் மீனா லோகு,70 வது வார்டு கவுன்சிலர் ஷர்மிளா சுரேஷ் நாராயணன்,83 வது வார்டு கவுன்சிலர் சுமா விஜயகுமார், வட்டக் கழகச் செயலாளர் சுரேஷ் நாராயணன், விஜயகுமார் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். இதில் சொத்து வரி பெயர் மாற்றம், மின்சார பெயர் மாற்றம்,கலைஞர் காப்பீடு அட்டை, மகளிர் உரிமைத் தொகை போன்றவற்றிற்கு உடனடி தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.



இம்முகாமின் சிறப்பு விருந்தினராக மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன், மாணவரணி மாநில செயலாளர் ராஜீவ் காந்தி ஆகியோர் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது 

இம்முகாமில் அரசு அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், பகுதி கழக செயலாளர்கள் கண்ணன் பத்ருதீன், மற்றும் ஐடி விங் பகுதி பொறுப்பாளர் கோல்டு தன்சில், இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி கழக நிர்வாகிகள் பத்மா மகாலட்சுமி அருணாச்சலம் ரமணி கவிதா நாகமாணிக்கம் ரூபன் முருகேசன், ஸ்ரீ கீதா வெங்கடேஷ் வில்லவன் கோதை காளிதாஸ் சண்முகம் ரங்கநாதன் குருசாமி ரவிச்சந்திரன் மார்க்கெட் ரவி, மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

 செய்தியாளர்: லீலா கிருஷ்ணன் – 📱99942 55455





No comments

Thank you for your comments