வாலாஜாபாத் ஒன்றிய வளர்ச்சிப்பணிகள்,காஞ்சிபுரம் ஆட்சியர் ஆய்வு
காஞ்சிபுரம்,செப்.24:
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட கட்டவாக்கம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.20.50லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையை ஆட்சியர் பார்வையிட்டு அங்கு எந்தெந்த வகையான செடிகள் வளர்க்கப்படுகின்றன எனக் கேட்டறிந்தார்.
இதனையடுத்து அதே ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள், நாயக்கன் குப்பம் ஊராட்சியில் ரூ.5.07 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பழங்குடியினர் குடியிருப்புகள்,அதே ஊராட்சியில் ரூ.40லட்சம் மதிப்பில் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடம் ஆகியனவற்றை பார்வையிட்டு பணிகளை விரைவாக முடிக்குமாறு ஊராட்சித்துறை அலுவலர்களை ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
பின்னர் ஊத்துக்காடு ஊராட்சியில் ரூ.41.35லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் துணை ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடத்தையும் ஆட்சியர் பார்வையிட்டார்.
ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.ஆர்த்தி உட்பட வட்டார வளர்ச்சி அலுவலர்களும் உடன் இருந்தனர்.
No comments
Thank you for your comments