Breaking News

தீடீரென சாலையில் ஏற்பட்ட 164 அடி பள்ளம் - viral video



பாங்காக்:

மருத்துவ சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

பாங்காக்கின் ஆளுநர் சாட்சார்ட் அளித்த தகவலின்படி,

“நோயாளிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மருத்துவமனையின் வெளிநோயாளி சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன”
என தெரிவித்துள்ளார்.

பள்ளம் உருவான காரணம்

இந்த பள்ளம் உருவானது, நிலத்தடி மெட்ரோ சுரங்கப்பாதையின் கூரை சேதமடைந்து விழுந்ததால் என அரசு விளக்கம் அளித்துள்ளது. சிறிதளவு மண் சரிந்தது, அது பெரிய பள்ளமாக மாறி தொடர்ந்து இடிந்து விழுந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

கட்டிட சேதம் – உயிரிழப்பு இல்லை

பள்ளம் காரணமாக அருகிலுள்ள சில கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன. ஆனால் அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்போ காயமோ ஏற்படவில்லை.

மேலும், தண்ணீர் குழாய் உடைந்து, அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

விரைவில் சீரமைப்பு உறுதி

அரசு அதிகாரிகள் அந்தப் பகுதியை ஆராய்ந்து வருவதாகவும், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் ஏற்படும் சிரமங்களை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார். 


No comments

Thank you for your comments