விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிமனை பட்டா கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காத்திருப்பு போராட்டம்
விருத்தாசலம் :
இந்த போராட்டத்தை ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன் தலைமையேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் கோ. மாதவன், மாவட்ட குழு உறுப்பினர் ஜெயராமன், விருத்தாசலம் ஒன்றிய செயலாளர் குமரகுரு உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதில் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் பெண் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து துணை வட்டாட்சியர் அன்புராஜ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால், விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
ꦾ செய்தியாளர்: R. காமராஜ் (9080215691)
🎥 ஒளிப்பதிவாளர்: V. வேல்முருகன் (8072117545)
No comments
Thank you for your comments