Breaking News

நெல் கொள்முதல் தாமதம் – விவசாயிகள் கண்ணீர்


விருத்தாசலம் : 


விருத்தாச்சலம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலைய கால தாமதத்தால் நெல்மணிகள் முளைப்புத் தன்மை ஏற்பட்டு வருவதால்,  விவசாயிகள் கண்ணீர்.

மாதக்கணக்கில் காத்துக் கிடக்கும் விவசாயிகளை கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்.



கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த  சின்னப௹ர் கிராமத்தில் அரசு நேரடி  கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. அவ்வாறு உள்ள  இந்நிலையத்திற்கு எடச்சித்தூர், கோனனாங்குப்பம், முகாசபரூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில், இருந்து விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை கொண்டு வந்துள்ளனர். 

இந்நிலையில் சுமார் 5000-த்திற்கும்,  மேற்பட்ட நெல்முட்டைகளுடன் விவசாயிகள் காத்திருக்கும் நிலையில், கடந்த இரண்டு வார காலமாக, அவ்வப்போது கனமழை பெய்து வருவதால், விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த, நெல்மணிகள் மறு முளைப்புத் தன்மை ஏற்பட்டு வீணாகி வருகிறது. 


இதனால் விவசாயிகள், செய்வதரியாமல் திகைத்து வருகின்றனர். மேலும்  விவசாயிகள் கடந்த ஒரு  மாதத்திற்கு மேலாக,  நெல் மூட்டைகளுடன் காத்துக் கிடப்பதாகவும், ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை லாரிகள் கொண்டு எடுத்து செல்லப்படாததால்,  விவசாயிகளின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் கிடப்பில் போட்டுள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர். 

உடனடியாக மாவட்ட நிர்வாகம், உரிய நடவடிக்கை மேற்கொண்டு,  விவசாயிகளின் நெல் மூட்டைகளை உடனடியாக,  கொள்முதல் செய்ய வேண்டும் எனவும்,  தொடர்ந்து மழையினால் நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகி வரும் நிலையில்,  ஈரப்பதத்தினை காரணம் காட்டாமல், விவசாயிகளின் நெல் மூட்டைகளை  கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை வைக்கின்றனர்.

இந்திய ஜனநாயக கட்சி விருத்தாசலம் மாவட்ட செயலாளர் துரைமுருகன், ஒன்றிய செயலாளர் கணேசன் உள்ளிட்ட ஏராளமானூர் கலந்து கொண்டனர்



பேட்டி: ஆறுமுகம் , விவசாயி. சின்னபரூர்


No comments

Thank you for your comments