காஞ்சிபுரத்தில் வாகன தணிக்கையில் ரூ.22 லட்சம் அபராதம் வசூல்
காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவுபடி, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவராஜ் உள்ளிட்டோர், காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
இதில், விதியை மீறி அதிக பாரம் ஏற்றிய சரக்கு வாகனங்கள், தகுதிச்சான்று புதுப்பிக்காத, ஓட்டுநர் உரிமம், அனுமதி சீட்டு, வரி செலுத்தாத, தார்பாலின் மூடாத, அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் வாகனங்கள் என, விதியை மீறி இயக்கிய 152 வாகனங்கள் கடந்த ஜூலை மாதம் கண்டறியப்பட்டது.
இந்த வாகனங்களுக்கு வரி, அபராதம் வசூலித்தும், வாகனத்தை சிறை பிடித்து அபராதம் வசூலித்தது என, ஒரே மாதத்தில் மொத்தமாக 22 லட்சத்து 7,735 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
விதியை மீறும் வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும், ஓட்டுநர் உரிமம், தகுதி சான்று, அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனம், பயணியர் மற்றும் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சிறைபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தெரிவித்தார்.
For English :
Following the orders of Kanchipuram District Collector Kalaichelvi, Regional Transport Officer Nagarajan, along with Motor Vehicle Inspector Sivaraj, conducted intensive vehicle inspections in Kanchipuram, Uthiramerur, and Walajabad areas. A total of 152 vehicles were booked in July for violations, including overloading, expired fitness certificates, lack of a valid license, unpaid taxes, uncovered tarpaulin, and use of loud air horns. Authorities collected fines amounting to ₹22.07 lakh and warned that strict monitoring and further action would continue against offenders.
.jpg)
.jpg)
.jpg)
No comments
Thank you for your comments