Breaking News

மங்கலம்பேட்டையில் மின்தடை: பொதுமக்கள் சாலை மறியல் – பெரும் பரபரப்பு

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மங்கலம்பேட்டை பகுதியில் இன்று மாலை 6 மணி முதல் மின்சாரம் முற்றிலும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.



பேரூராட்சி மன்ற உறுப்பினர் கோமதி விஜயரங்கம் தலைமையில் போராட்டம்:

இதையடுத்து, மங்கலம்பேட்டை பேரூராட்சி மன்ற உறுப்பினர் கோமதி விஜயரங்கம் தலைமையில்  50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் விருத்தாசலம் – உளுந்தூர்பேட்டை மெயின் ரோட்டில் அண்ணா சிலை அருகே சாலையில் உட்கார்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதன் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து பல மணி நேரத்துக்கு மேல் முடங்கியது

📌  Fruits Are Yummy! 🍎🍌 Energetic & Happy Mood Songs
🎉 Don’t forget to LIKE 👍 and SUBSCRIBE 🔔 to join the fun!  

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மங்கலம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மின்தடை மற்றும் சாலை மறியல் காரணமாக இன்று மாலை அந்தப் பகுதி பெரும் பரபரப்பாக மாறியது.

📰 செய்தியாளர்: R. காமராஜ் (9080215691)
🎥 ஒளிப்பதிவாளர்: V. வேல்முருகன் (8072117545)

No comments

Thank you for your comments