ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் என்ற விழிப்புணர்வு மாரத்தான்...!
கோவை கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையின் சார்பில் இதயக் குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில், "ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் என்ற விழிப்புணர்வு மாரத்தான் 3-ம் பதிப்பு நடைபெற்றது
குழந்தைகளுக்கு ஏற்படும் இதயக் குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிந்து உரிய நேரத்தில் சரியான சிகிச்சைகளை அளிப்பதன் மூலம் முற்றிலுமாக அவர்களை குணப்படுத்த முடியும் எனவே பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, பாப்பநாயக்கன்பாளையம், மணி மேல்நிலைப் பள்ளியில் இந்த மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.
எல் எம் டபிள்யூ லட்சுமி மில்ஸ் மற்றும் லட்சுமி கார்ட்ஸ் கிளாத்திங் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்தியது குறிப்பிடத்தக்கது.
📝 செய்தியாளர்: லீலா கிருஷ்ணன் – 📱99942 55455


No comments
Thank you for your comments